/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மில்லிங் பணிகள் முடிந்தாச்சு... ரோடு போடுவது எப்போது...
/
மில்லிங் பணிகள் முடிந்தாச்சு... ரோடு போடுவது எப்போது...
மில்லிங் பணிகள் முடிந்தாச்சு... ரோடு போடுவது எப்போது...
மில்லிங் பணிகள் முடிந்தாச்சு... ரோடு போடுவது எப்போது...
ADDED : ஜூலை 09, 2025 01:07 AM

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி பகுதிகளில் ரோடு போட 10 நாட்களுக்கு முன் பணிகள் முடிந்து இதுவரை ரோடு போடப்படாதாதல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சி பகுதிகளில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ரோடு போடப்படும். கடைசியாக 2020லும், கொரோனா ஊரடங்கால் 2021லும் ரோடு போடப்பட்டது. தற்போது கச்சேரி ரோடு, பாத்திமா நகர் மெயின் ரோடு, லெட்சுமி காலனி, பி1பி1 ரோடு, தாளையப்பன் தெரு, வாடியான் தெரு, தெப்பம் தெற்கு ரத வீதி, படேல் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் புதிய ரோடு போடுவதற்காக 10 நாட்களுக்கு முன் மில்லிங் பணிகள் செய்யப்பட்டு ரோடு தோண்டப்பட்டது.
இந்நிலையில் இன்னும் ஆறு நாட்களில் காமராஜர் பிறந்த நாள் விழா வேறு வரவுள்ளதால் இவ்வாறு ரோடுகளை தோண்டி போட்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தும்.
இதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.