/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் பங்கேற்பு
/
வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் பங்கேற்பு
ADDED : மே 27, 2025 12:28 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 1 கோடி 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை அருகே வில்லிபத்திரியில் 30 லட்சம் மதிப்பிலான சமுதாயக்கூடம் கட்டுவதற்கும் 31.40 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டடம் கட்ட கட்டுவதற்கும், பாலையம்பட்டி தீர்த்தக்கரை பகுதியில் 42.40 லட்சம் புதிய தார் சாலை அமைக்கவும், பசும்பொன் நகரில் 13.30 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம் கட்டவும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
பாலையம்பட்டி விரிவாக்க பகுதியில் துவங்கப்பட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளையை திறந்து வைக்கும் மூன்று சுய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 23 லட்சம் கடன் உதவிகளையும் வழங்கினார்.