/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கலப்பு
/
நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கலப்பு
நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கலப்பு
நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கலப்பு
ADDED : பிப் 11, 2025 04:47 AM
விருதுநகர் மாவட்டம் மழை மறைவு பகுதியாகும்.இங்கு ஆண்டுக்கு ஆண்டு பருவமழை மிகவும் குறைவாகவே செய்து வருகிறது. இதன் காரணமாகவே விருதுநகர் மாவட்டத்தில் அதிகமான அளவில் கண்மாய்கள் உருவாக்கப்பட்டு இதன்மூலம் பாசனம் செய்யப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி வரும் ஆறுகளில் பெரும்பாலும் பருவ மழை காலங்களில் மட்டுமே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரோட்டம் காணப்படுகிறது. மூன்று மாதங்கள் மட்டுமே தண்ணீர் ஓடும் இந்த ஆறுகளில் பல்வேறு பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டுள்ளது.
தடுப்பு அணைகள், அணைக்கட்டுகள் மூலம் பல்வேறு ஊராட்சிகளில் உள்ள கிராம விவசாயிகள் பாசன வசதி பெற்று நெல் கரும்பு மக்காச்சோளம் சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விளைவித்து வருகின்றனர். இந்த நிலையில் கண்மாய், ஆறுகளில் குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் தொழிற்சாலை பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர் கலந்து வருகிறது.
இதன் காரணமாக தண்ணீர் மாசு அடைந்து காணப்படுகிறது. பல கண்மாய்களில் தொழிற்சாலை கழிவுநீரோடு குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளும் கொட்டப்படுகின்றன.
இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தை பயன்படுத்திக் கொண்டு செப்டிக் டேங்க் கழிவு நீர் கண்மாய், ஆற்றுப்பகுதிகளில் கொட்டப்படுகிறது. மேலும் ஊரணிகள் குளங்கள் கூட கழிவு நீர் தொட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் விவசாய பரப்பு குறைந்து வருவதோடு விவசாயிகளும் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மாசு அடைந்த தண்ணீரில் பயிரை விளைவிக்க முடியாமல் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசு நிலங்களாக போட்டுள்ளார்கள். இவை சில வருடங்களில் தரிசு நிலமாக அறிவிக்கப்பட்டு பின்னர் பிளாட்டுகளாக போடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் விவசாய நிலங்கள் குறைந்து வருவதோடு விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கலப்பதை தடுக்கஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.