/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மியாவாகி காடு பராமரிப்பு இல்லாததால் வீணாகும் நிதி
/
மியாவாகி காடு பராமரிப்பு இல்லாததால் வீணாகும் நிதி
ADDED : ஆக 16, 2025 11:51 PM

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் அயன் சத்திரப்பட்டியில் மியாவாகி காடுகள் அமைப்பதற்காக கண்மாய் கரையிலும் ஆற்றங்கரையிலும் நடப்பட்ட நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகளை பராமரிக்காமல் விடப்பட்டதால் மரக்கன்றுகளை கால்நடைகள் மேய்ந்து அரசு வீணாகி வருகிறது.
நகர் வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும் நுாறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சிகள் தோறும் மியாவாகி காடுகள் உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவர்கள் பொறுப்பு வைக்கும் போது இந்த மியாவாகி காடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது பல ஊராட்சிகளில் மியாவாகி காடுகள் வளர்ச்சி திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.
சாத்துார் அயன் சத்திரப் பட்டியில் போக்குவரத்து நகர் அருகில் வைப்பாற்றின் கரையிலும், சத்திரப் பட்டி ஆனந்த நகர் கண்மாய் கரைப்பகுதியிலும் மியாவாகி முறையில் புங்கை, பூவரசு,புளி, வாகை, வேம்பு, மேலும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் ஆயிரக்கணக்கில் நடப்பட்டது.
மேலும் இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீர் குழாய்களும் பல லட்ச ரூபாய் மதிப்பில் போடப்பட்டது. ஊராட்சித் தலைவர்கள் பொறுப்பு வைத்த நிலையில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பெண்கள் ஆண்கள் இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். மேலும் கால்நடைகள் மரக்கன்றுகளை தின்று விடாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு மரக்கன்றுக்கும் வேலியும் அமைக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை தொழிலாளர்கள் பராமரிப்பில் வளர்ந்து வந்த இந்த மியாவாகி காடு வளர்ப்பு தற்போது பராமரிப்பு இன்று அழிந்து வருகின்றன.
ேலும் மரம் வளர்ப்பிற்கு போடப்பட்ட போர்வெல் தண்ணீர் குழாய்களும் தற்போது காட்சி பொருளாக உள்ளது.அரசு நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்த திட்டம் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் அரசின்நோக்கமும் நிதியும் வீணாகிவிட்டது. மீண்டும் மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து பராமரிக்கவும் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் மியாவாகி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.