தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எம்.எல்.ஏ., ஆய்வு

 எம்.எல்.ஏ., ஆய்வு

 எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : மே 21, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மகப்பேறு பிரிவு, அம்மா உணகவத்தில் எம்.எல்.ஏ., செல்வம் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், பிரசவித்தவர் களிடம் நலம் விசாரித்தார். மேலும் மகப்பேறு பிரிவில் உள்ள வசதிகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டீன் ஜெயசிங்கிடம் கேட்டறிந்தார்.

மேலும் நோயாளிகள், அவர்களை உடனிருந்து பார்த்து கொள்பவர் களுக்கான கழிவறை, குளியலறைகளை ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி களிடமும், நோயாளிகள், அவர்களின் உறவினர் களிடம் பணியாளர்கள் பணம் கேட்கிறார்களா எனவும் கேட்டார். அங்குள்ள அம்மா உணவகத்தின் கூரை சேதத்தை சரிசெய்யும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதில் மருத்துவமனை கண்காணிப் பாளர் ரமணி, துணை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, உதவி ஆர்.எம்.ஓ., கார்த்திக், அறிவு, நகராட்சி பொறியாளர் பிரபாகரன், கவுன்சிலர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us