/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செப். 2, 3 ல் சிவகாசியில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை
/
செப். 2, 3 ல் சிவகாசியில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை
செப். 2, 3 ல் சிவகாசியில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை
செப். 2, 3 ல் சிவகாசியில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை
ADDED : ஆக 30, 2025 05:40 AM
மதுரை: சிவகாசியில் சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில், செப். 2, 3 ல் நடமாடும் பாஸ்போர்ட் சேவை நடக்க உள்ளது.
மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்ததாவது: பத்து தென்மாவட்ட மக்களின் பாஸ்போர்ட் சேவையை கருத்தில் கொண்டு அதனைப் பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்தின் கீழ் மதுரை, திருநெல்வேலியில் பாஸ்போர்ட் சேவை (பி.எஸ்.கே.) மையங்களும், 8 போஸ்ட் ஆபீஸ்களில் விரிவாக்க மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
சேவையை விரிவுபடுத்தும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சகம் நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவை வேனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை, சிவகாசியில் ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் உள்ள சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செப். 2, 3 ல் நடமாடும் பாஸ்போர்ட் சேவை அலுவலகம் நடக்க உள்ளது. 80 விண்ணப்பங்கள் வரை பெற்று ஆன்லைனில் சமர்பிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
இந்த சேவைக்கு முன் அனுமதி பெற www.passportindia.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து RPO Madurai Sivakasi Mobile Van என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.