ADDED : பிப் 13, 2026 05:51 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு போல் நடத்தி விவிபாடு, தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விரைவில் 2026 சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. எஸ்.ஐ.ஆர்., பணிகள் ஜன. 30 உடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினத்தோடு மறு பரிசீலனை பணிகளும் முடிந்தது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் என மக்கள் அடிக்கடி வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் தினசரி நுாறு பேரிடம் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டு போட்டு அதன் பின் விவிபாடு மூலம் உறுதி செய்யப்பட்டு தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து விளக்கப்படுகிறது. மக்கள் இது குறித்த சந்தேகங்களை விழிப்புணர்வின் போது கேட்டறியலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
