/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு கண்காணிப்பு மையங்கள்
/
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு கண்காணிப்பு மையங்கள்
ADDED : நவ 20, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை கண்காணிக்கவும், குறைவான முன்னேற்றம் உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை கண்டறிய கண்காணிப்பு மையங்களை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நாளுக்குள் அனைத்து படிவங்களையும், வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து பெற்று வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

