/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்காணிப்பது அவசியம்
/
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்காணிப்பது அவசியம்
ADDED : மே 07, 2025 01:33 AM
விருதுநகர்: மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை முறையாக கண்காணிப்பது அவசியமாகி உள்ளது. பெய்த பருவமழையை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நீர்மேலாண்மை நடவடிக்கை எடுப்பதும் தேவையாக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும், வெளியூர் நீராதாரங்கள், நீர் தேக்கங்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
விருதுநகர், சாத்துார், சிவகாசி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மினிலாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் வாங்கி தான் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு விநியோகிக்கப்படும் நீர் ஊற்றுக்கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி பெரும்பாலும் விற்கப்படுகிறது.
இது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தாலும், மக்களை விலைக்கு குடிநீர் வாங்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஒன்றிய நிர்வாகங்களுக்கு குடிநீர் வரி செலுத்தியும் பலனில்லாத சூழல் உள்ளது.
இவ்வாறு தனியார் விநியோகிக்கும் குடிநீரானது எந்தளவுக்கு சுத்திகரிக்கப்படுகிறது என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விநியோகம், நிலத்தடிநீரை உறிஞ்சும் தன்மை ஆகியவை முறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதற்கு பதில் இல்லை.
இதனால் நாளுக்கு நாள் நிலத்தடிநீர் குறைந்து கொண்டே வருகிறது.
ஏற்கனவே நிலத்தடிநீரானது விருதுநகர் மாவட்டத்தில் சிவப்பு மண்டலத்தில் உள்ளது. தற்போது நல்ல மழை பெய்துள்ளது. கண்மாய்களும் நன்றாக நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உள்ளூர் நீராதாரங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் வழங்கும் திறனை மேம்படுத்தி மக்களுக்கு சீரான குடிநீரை வழங்க வேண்டும்.
நகர்பகுதகிளில் தான் மினிலாரிகளில் வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்குகின்றனர்.
ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தண்ணீரை தான் பயன்படுத்துகின்றனர். நீர்மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.