/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூட்டா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
மூட்டா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2026 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கமான மூட்டா சார்பில் அரசு கல்லுாரி, உதவி பெறும் கல்லுாரி என அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மாறான பாகுபாட்டை களைவது, 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பணிமேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை விருதுநகரில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் பெரியசாமி ராஜா தலைமை வகித்தார். மண்டல துணை தலைவர்கள் சுப்புராஜ், ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர். கிளை தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

