/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுாரிக்கு செல்லாத மகன் வேதனையில் தாய் தற்கொலை
/
கல்லுாரிக்கு செல்லாத மகன் வேதனையில் தாய் தற்கொலை
ADDED : ஜன 24, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி 47, விவசாயி.
இவரது மனைவி பூங்கொடி 44,  இத்தம்பதியின் இரண்டாவது மகன் கருப்பசாமி மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.
நேற்றும் கல்லூரிக்கு செல்லாமல் கான்சாபுரத்தில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த தாய் பூங்கொடி, நேற்று காலை  சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூமாபட்டி போலீசார் விசாரித்தனர்.

