/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ேதர்தல் வாக்குறுதியாகவே இருக்கும் 'விருதுநகரில் லாரி முனையம்' விரைவில் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ADDED : நவ 10, 2024 06:39 AM

விருதுநகர் : விருதுநகரில் லாரி முனையம் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சர்வீஸ் ரோடு, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விருதுநகரில் உள்ள பருப்பு மில், எண்ணெய் ஆலைகள், வத்தல் கமிஷன் மண்டிகள், ஜின்னிங் மில்கள் ஆகியவற்றால் முக்கிய தொழில் நகரமாக மாறியுள்ளது. இதனால் தினசரி லாரிகள் மூலம் மூலப்பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. லாரிகள் மூலம் துாத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி இருபகுதிகளிலும் லாரி முனையம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது.
இதை 2021 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளும் வாக்குறுதியாக வைத்து பிரசாரம் செய்தன.
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகியும் லாரிமுனையம் அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் லாரிகளை நிறுத்த இடமில்லாமல் விருதுநகர் - சிவகாசி ரோட்டில் உள்ள சர்வீஸ் ரோடு, விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள சர்வீஸ் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே சாத்துார் ரோட்டின் ஓரங்களில் லாரிகளை நிறுத்துகின்றனர்.
மேலும் ஏதாவது விபத்து நிகழ்ந்தால் மட்டும் லாரிகளை தேடிச் சென்று அபராதம் விதிக்கின்றனர்.
ஆனால் விபத்து ஏற்படுவதை தடுக்க லாரி முனையம் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு யாரும் வருவதில்லை.
எனவே விருதுநகரில் லாரி முனையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசின் கவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் கொண்டுச் செல்ல வேண்டும்.