/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 05, 2025 06:37 AM

சிவகாசி : சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது தற்காலிகமாக தடுப்புச் சுவராவது ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் பெரியகுளம் கண்மாய் செல்லும் ஓடையில் தரைப்பாலம் உள்ளது. சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த ரோடு தான் முக்கிய மாற்றுப்பாதையாக உள்ளது.
கனரக வாகனங்கள், பள்ளி கல்லுாரி பஸ்கள், நகர் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பாலத்தின் வழியாகத்தான் செல்கின்றன. இந்தப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் வரும்போது பாலத்தின் மீது செல்கிறது. இதனால் டூவீலர் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் சென்று வருவது சிரமம் ஏற்படுகிறது. சிறிது அசந்தாலும் ஓடையில் தவறி விழ வாய்ப்பு உள்ளது.
மேலும் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே இந்த தலைப்பாளத்தில் அகற்றி மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது தற்காலிகமாக தடுப்புச் சுவரா வது ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.