/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம் ரோடு விரிவாக்கப் பணி துவக்கம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ADDED : அக் 30, 2025 03:34 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம் ரோட்டை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல் கட்டமாக ரூ. 4 கோடியில் ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நேற்று முதல் துவங்கியது. இதனால் மம்சாபுரம் மக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து 5 கி.மீ. தூரம் உள்ள மம்சாபுரத்திற்கு தினமும் வாகன போக்குவரத்து அதிகளவில் நடந்து வருகிறது. ஆனால், ரோடு குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது. எனவே, ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென மக்கள் கோரி வந்தனர்.
இதனையடுத்து தற்போது 3.75 மீட்டர் அகலம் உள்ள ரோட்டின் இரு புறமும் விரிவாக்கம் செய்து 5.5 மீட்டர் அகலத்தில் ரோடு போடுவதற்கு ரூ.4 கோடியில் டெண்டர் விடப்பட்டது.
இதன்படி கம்மாபட்டி ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் இருந்து மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை 2.2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நேற்று முதல் துவங்கியது.
மேலும் பொன்னாங்கண்ணி கண்மாயில் தடுப்பு சுவர் கட்டி ரோடு விரிவாக்கம் செய்யும் பணியும் இன்னும் விரைவில் துவங்கும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.