தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சட்டசபை தேர்தலுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல்

 சட்டசபை தேர்தலுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல்

 சட்டசபை தேர்தலுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல்


ADDED : பிப் 24, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சட்டசபை தேர்தலுக்காக எஸ்.ஐ., க்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்யப்படுவதால் எஸ்.ஐ., க்கள் விரக்தியடைந்துள்ளனர்.

2026 சட்டசபை தேர்தல் ஏப். ல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதற்காக ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளை இடம் மாறுதல் செய்வது வழக்கம். அதன்படி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்யப்படுவர்.

சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பணிபுரியும் எஸ்.ஐ.,க்கள் மாவட்டத்திற்கு உள்ளாகவே வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யப்படுவர். இதுகுறித்து தேர்தல் கமிஷனும் எஸ்.ஐ.க்களை தொகுதியை விட்டு மாறுதல் செய்தால் மட்டும் போதுமானது. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்ய தேவை இல்லை என அறிவித்துள்ளது. ஆனால் மதுரை மண்டலத்தில் பெரும்பான்மையான எஸ்.ஐ.,க்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்யப் பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை பார்க்கும் எஸ்.ஐ.,க்கள் தேனி மாவட்டத்திற்கும் விருதுநகர் மாவட்டத்தில் வேலை பார்க்கும் எஸ்.ஐ.,க்கள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் சொந்த மாவட்டத்திற்கோ அல்லது ஏற்கனவே பணிபுரிந்த இடத்திற்கோ மீண்டும் மாறுதல் செய்யப்பட்டு விடுவர்.

இதுகுறித்து எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது, தமிழகத்தில் மதுரை மண்டலத்தை தவிர மற்ற பகுதிகளில் பணிபுரியும் எஸ்.ஐ., க்கள் தொகுதியை விட்டு மட்டுமே மாறுதல் செய்யப்பட்டு மாவட்டத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் மதுரை மண்டலத்தில் மட்டும் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். எனவே இங்கேயும் மாவட்டத்திற்கு உள்ளேயே பணி மாறுதல் செய்ய வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us