/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தவறான சட்டத்தால் காட்டுப்பன்றிகள் தொல்லை எம்.பி., மாணிக்கம்தாகூர் புகார்

ADDED : டிச 25, 2024 06:35 AM
அருப்புக்கோட்டை : மத்திய அரசின் தவறான சட்டத்தால் காட்டுப் பன்றிகளின் தொல்லையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என அருப்புக்கோட்டையில் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.
அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம், வெள்ளையாபுரம், மலைப்பட்டி, பாலவனத்தம் உள்ளிட்ட பகுதிகளில் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் விதமாக எம்.பி., மாணிக்கம் தாகூர் கூட்டணி கட்சிகளுடன் கலந்து கொண்டார். பின் அவர் கூறியதாவது: மத்திய அரசின் தவறான சட்டத்தால் காட்டுப் பன்றிகளின் தொல்லையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வனத்துறை அமைச்சரிடம் கூறி விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி பெயரை எடுக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமானப்படுத்தி உள்ளார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பல பகுதிகளில் போராட்டம் நடத்தியுள்ளது. அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என அனைத்து மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.
இதை எதிர்த்து போராடிய எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி, அவர் செய்யாததை செய்தது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர், என்றார்.