/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,பஸ் ஸ்டாண்டில் சகதி: மக்கள் அவதி
/
ஸ்ரீவி.,பஸ் ஸ்டாண்டில் சகதி: மக்கள் அவதி
ADDED : அக் 16, 2025 04:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் சகதி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் புதிய கடைகள் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் மண் குவியல்கள் பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதியிலும், வத்திராயிருப்பு பஸ்கள் நிற்கும் இடங்களிலும் பரவி கிடப்பதால் தற்போது பெய்து வரும் மழையில் சகதி ஏற்பட்டு உள்ளது. மேலும் பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியில் வாறுகால் பாலத்தின் சிமெண்ட் தளம் சேதமடைந்து உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் வாகனங்களும், மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.