ADDED : ஆக 28, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி, ஆக.29 -
நரிக்குடி இருஞ்சிறையில் மந்தையம்மன் கோவில் ஆவணி மாத முளைப்பாரி திருவிழா நடந்தது.
சென்ற வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று பெண்கள் முளைப்பாரியை சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து ஊருணியில் முளைப்பாரியை கரைத்தனர். பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
