நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரில் செல்லாயி அம்மன் கோயில் ஆடித்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. பெண்கள் முளைப்பாரி கும்மி பாடல்கள் பாடினர்.
முக்கிய நிகழ்வாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்றனர்.
முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கருப்பசுவாமி கோயில் அருகே சின்ன, பெரிய கண்மாய்களில் கரைத்தனர். ஆண்கள் சேர்த்தேண்டி வேடம் அணிந்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.