sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 முள்ளிக்குடியில் குடிநீரின்றி தவிப்பு

/

 முள்ளிக்குடியில் குடிநீரின்றி தவிப்பு

 முள்ளிக்குடியில் குடிநீரின்றி தவிப்பு

 முள்ளிக்குடியில் குடிநீரின்றி தவிப்பு


ADDED : பிப் 13, 2026 05:47 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி முள்ளிக்குடியில் குடிநீரின்றி இரு மாதங்களாக தவித்து வருவதால் மறியலுக்கு முயன்ற பெண்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ததால் கலைந்து சென்றனர்.

நரிக்குடி முள்ளிக்குடியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். சில மாதங்களாக குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. குடிநீருக்காக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிய வருகின்றனர். குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்ததையடுத்து புதிதாக மேல்நிலைத் தொட்டி, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் தரைதள தொட்டி அமைக்கப்பட்டது. இருப்பினும் இரு திட்டங்களிலும் முறையாக குடிநீர் சப்ளை செய்யவில்லை. ஏற்கனவே இருந்த தொட்டிகளில் இருந்து அவ்வப்போது சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முறையாக சுத்தம் செய்யாததால் அசுத்தமாகி புழுக்கள் உண்டாகி தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் எப்போதாவது திறந்து விடப்படும் தண்ணீரை பிடிக்க குடங்களுடன் பெண்கள் முண்டியடித்து சண்டையிட்டு பிடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. 1, 2 குடங்கள் மட்டுமே பி டிக்க முடிந்தது. அதுவும் தற்போது 2 மாதங்களாக சப்ளை இல்லை. அங்குள்ள குளத்தில் தண்ணீரை எடுத்து வடிகட்டி குடிக்க, சமைக்க பயன்படுத்தி வருகின்றனர். அக் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று ரோடு மறியலில் ஈடுபட முயன்றனர்.

வருவாய்த் துறை, ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us