தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பல்திறன் கலை நிகழ்ச்சி போட்டிகள்

பல்திறன் கலை நிகழ்ச்சி போட்டிகள்

பல்திறன் கலை நிகழ்ச்சி போட்டிகள்


ADDED : பிப் 14, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் பல்திறன் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் மதுரை, துாத்துக்குடி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் 400 பேர் கலந்து கொண்டனர்.

கல்லுாரி தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர். நெருப்பில்லா சமையல், கழிவு பொருட்களில் இருந்து பொருட்கள் தயாரித்தல், காய்கறி அலங்காரம் உள்பட 10 போட்டிகள் நடந்தது.

இதில் சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லுாரி முதலிடம், மதுரை அமெரிக்கன் கல்லுாரி, இரண்டாமிடம் பிடித்தது. இதற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் விமல்பிரியன், ஒருங்கிணைப்பாளர் ராம்ராஜ் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us