/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ஏலம் விடப்பட்ட மாநகராட்சி கடைகள்
/
சிவகாசியில் ஏலம் விடப்பட்ட மாநகராட்சி கடைகள்
ADDED : ஆக 30, 2025 05:34 AM
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி மாநகராட்சியில் காய்கறி மார்க்கெட், பஸ்டாண்டில் உள்ள வணிக கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது.
சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட் கடைகள் ,வாகன நிறுத்துமிடம், சிவன் கோயில் மாடவீதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாக கடைகள், டூவீலர் காப்பகம், வேன் ஸ்டாண்டு, பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யும் உரிமை, பொது கட்டண கழிப்பிடங்கள், மீன் மார்க்கெட், மாநகராட்சி வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது ஏலம் மூலம் ஒப்பந்தம் விடப்படும்.
இவற்றில் 15 இனங்களுக்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில் 2024 முதல் 2027ம் ஆண்டு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்த ஏலம் 2024 பிப். ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏலம் விடப்படவில்லை. ஏலம் விடப்பட்டிருந்தால் மாநகராட்சிக்கு டெபாசிட் தொகை மட்டும் ரூ. ஒரு கோடி வரை வருமானம் கிடைத்திருக்கும். இந்த வருமானம் கிடைக்காததால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளும் பாதிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இவற்றிற்கான ஒப்பந்தம் ஏலம் விடப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தி ஒப்பந்த ஏலம் விட வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. காய்கறி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடை பஸ்டாண்டில் உள்ள மூன்று கடைகள் ஏலம் விடப்பட்டது.
கமிஷனர் சரவணன் கூறுகையில், தற்போது நான்கு கடைகளுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அனைத்து கடைகளுக்கும் ஏலம் விடப்படும், என்றார்.

