ADDED : ஏப் 21, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி:காரியாபட்டி வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் 52. நேற்று முன் தினம் இரவு கட்டிலில் தூங்கியவர், காலையில் கழுத்து அறுப்பட்டு இறந்து கிடந்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பரமசிவம் மகள் சூர்யா 27. காரியாபட்டி பிசிண்டியைச் சேர்ந்த கருப்பசாமி 32, ஐ காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சூர்யா தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மனைவி சூர்யா பிரிவுக்கு அவரது தந்தை பரமசிவம் தான் காரணம் என கருப்பசாமி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். ஆத்திரத்தில் இருந்த கருப்பசாமி கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
