/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு தொழிலாளி மர்ம சாவு; தனிப்படை விசாரணை
/
பட்டாசு தொழிலாளி மர்ம சாவு; தனிப்படை விசாரணை
ADDED : ஜூலை 23, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிமுருகன் 43. இவர் தனியார் பட்டாசு தயாரிப்பு ஆலையில் தங்கி பணிபுரிந்து வந்தார். ஜூலை 21ல் இரவு மது அருந்திய அவரை ,அவரது சகோதரர் டூவீலரில் அழைத்து வந்து ஆலை வளாகத்தில் விட்டு சென்றார்.
நேற்று முன்தினம் காலை 7:45 மணிக்கு பணிக்கு ஆலை வளாகத்தில் உள்ள தகர செட்டில் கட்டிலில் பழனிமுருகன் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆமத்துார் போலீசார் இரவு வாட்ச்மேன், டூவீலரில் வந்து இறக்கி விட்ட சகோதரரிடம் விசாரித்தனர். இந்த வழக்கை விரைந்து முடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.