ADDED : ஜூன் 16, 2026 02:04 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நத்தம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் நேற்று காலை 8:00 மணி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் தெற்குவெங்காநல்லுார் வரை 71.6 கி.மீ., துாரத்திற்கு, ரூ.1318 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் மேம்பால பணி நடக்கிறது.
இந்த சூழலில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நாகர்கோவில் மண்டல திட்ட இயக்குனர் சச்சின் குமார் தலைமையான அதிகாரிகள் நத்தம்பட்டி டோல்கேட் கட்டண வசூலை துவக்கி வைத்தனர்.
