/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி
/
ராஜபாளையத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி
ADDED : மே 10, 2025 06:59 AM
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி மே 10 முதல் தொடங்கி மே 15 வரை நடக்கிறது.
ராஜபாளையம் நகர கூடைப்பந்து கழகம் சார்பில் 30 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக நடைபெறுகிறது.
இதில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கேரள மின்வாரியம், போலீஸ், பேங்க் ஆப் பரோடா, ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி போன்றவைகள் பங்கேற்கின்றன.
பெண்கள் பிரிவில் மேற்கு ரயில்வே மும்பை, வருமான வரித்துறை சென்னை, கேரள மின்வாரியம், ரைசிங் ஸ்டார் சென்னை அணிகள் பயிற்சியாளர் மேலாளர் என 170 பேர் பங்கேற்கின்றனர்.
போட்டிகள் தினமும் மாலை 5:00 மணிக்கு தொடங்கி பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் ஆறு நாட்கள் மின்னொளியில் நடைபெறுகிறது.
ஆண்கள் பிரிவில் 8 அணிகளும் பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொள்கின்றன.
லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளை ராஜபாளையம் நகர கூடைப்பந்து கழக நிர்வாகிகள் செய்துள்ளனர்.