ADDED : ஜூன் 08, 2025 11:23 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் அமெரிக்கா மல்டிகோர்வேர் நிறுவன அதிகாரிகளின் தேசிய ஆராய்ச்சி கருத்தரங்கு நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மல்டி கோர் வேர் நிறுவன தலைமை அதிகாரி கருணாகரன், சி.ஹெச்.ஆர். சசிகாந்த் ஜெயராமன், ஹைதராபாத் ஐ.யு.சி.இ. நிறுவனர் கிருஷ்ணா வேடுலா, அமெரிக்கா மல்டி கோர்வேர் நிறுவன சி.டி.ஓ. ஜான்க்ஸட்ரேட்டான், உயர் அதிகாரிகள் சுப்பிரமணியன் ஹேமராஜ், விபி சுஜித்ரா தியாகராஜன், சென்னை சி.ஐ.டி முதல்வர் ரமேஷ் பேசினர்.
அனைத்து மாநில ஆராய்ச்சி மையங்களை சேர்ந்த 125க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆராய்ச்சி வளர்ச்சிகளை பகிர்ந்தனர். சிறந்த ஆராய்ச்சிகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பல்கலைக்கழக ஐ.ஆர். இயக்குனர் சுப்ரஹாஷ், பேராசிரியர் பரிவழகன் செய்திருந்தனர்.