ADDED : மார் 01, 2026 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லுாரி அறிவியல் மன்றம், முதுகலை கணித ஆராய்ச்சித்துறை சார்பில் உலக நலனுக்கான உலக அறிவியல் என்ற கருப்பொருளை மையப்படுத்தி, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் திலகவதி, கல்லுாரி செயலர் அருணா புரவலர்களாக வழி நடத்தினர். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் அறிவியல் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.ஆலோசகர் பெத்தனாச்சி செல்வம், முதுகலை கணித ஆராய்ச்சி துறை தலைவர் வரவேற்றனர். திருவனந்தபுரம் விஞ்ஞானி கட்டமைப்பு பகுப்பாய்வாளர் மனோஜ் குமார் பேசினார்.தேசிய அறிவியல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் கவுசல்யா தேவி நன்றி கூறினார்.

