/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆனையூரில் இயற்கை நுண்ணுயிரி உரம் தயாரிப்பு *ஆர்வமாக வாங்கிச் செல்லும் விவசாயிகள்

ADDED : டிச 20, 2025 05:53 AM

சிவகாசி:சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் கழிவு காய்கறிகள், பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை நுண்ணுயிரி உரத்தை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
சிவகாசி அருகே ஆனையர் ஊராட்சி சமத்துவபுரத்தில் இயற்கை நுண்ணுயிரி உரக் கூடம் அமைக்கப்பட்டது. இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை உரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். மேலும் கடைகள், மார்க்கெட்டில் கழிவு காய்கறிகள் பழங்களை வாங்குகின்றனர். கழிவு காய்கறிகள் பழங்களை பிரித்து எடுத்து அரைக்கப்படுகிறது. பின்னர் 7 தொட்டிகள் அமைக்கப்பட்டு ஏழு நாட்கள் அரைக்கப்பட்ட கழிவுகள் போடப்படுகிறது. இதேபோல் மூன்று முறை 21 நாட்கள் பக்குவப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் தொட்டிகளில் 21 நாட்கள் காய வைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் கழிவுகள் அனைத்தும் மட்கி இயற்கை உரமாக மாறிவிடுகிறது .இதனை ஒவ்வொரு கிலோவாக பாக்கெட் போட்டு கிலோ ரூ. 20 என விற்பனை செய்கின்றனர். இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கின்றது. இந்த உரத்தை வீடுகளில் உள்ள தோட்டங்கள், பூச்செடிகளுக்கு மக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் தென்னை, வாழை போன்றவற்றிற்கு உரம் இடுவதற்காக விவசாயிகளும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.