நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு இயற்கை ஆய்வு முகாம் கொடைக்கானல் அருகே பள்ளங்கி கிராமத்தில் நடந்தது.
இதில் மாணவர்கள் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, மலை பகுதியில் விவசாயம் செய்யும் முறை, ஒரு பொறியாளராக இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டனர்.
மேலும் மலை பகுதிக்குள் இருந்து தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செயலாளர் தர்மராஜன், பொருளாளர் ஸ்ரீமுருகன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், முதல்வர் செந்தில் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.