தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அவசியம்

அவசியம்

அவசியம்


ADDED : நவ 23, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* பட்டாசு ஆலைகளுக்கு முறையான சாலை வசதி செய்வது

* காட்டுப்பகுதியில் உள்ளதால் விபத்துக்காலங்களில் சிக்கல்

சாத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக பட்டாசு தொழிற்சாலைகள் ஒதுக்கு புறமாக காட்டு பகுதிகளில் உள்ளதால் முறையான சாலை வசதி இல்லாததால் விபத்துக்காலங்களில் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவி., தாலுகாக்களில் நுாற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

நாக்பூர் லைசென்ஸ், டி.ஆர்.ஓ. லைசென்ஸ், சென்னையில் லைசன்ஸ் பெற்ற பட்டாசு ஆலைகளில் சோல்சா, தரைச்சக்கரம் பூச்சட்டி,கம்பி மத்தாப்பு, பேன்சி ரக பட்டாசுகள் செய்யப்படுகின்றன.

இந்த பட்டாசு ஆலைகள் பெரும்பாலும் ஊராட்சி பகுதியில் குடியிருப்பு பகுதிகள் இல்லாத காட்டுப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக இங்கு பணி புரிவதற்காக நகர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் பஸ்கள், வேன்கள், மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த பட்டாசு ஆலைகள் முறையாக தொழில்வரி செலுத்திய போதும் ஊராட்சிகளில் இருந்து பட்டாசு ஆலைகளுக்கு ரோடு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளன.

காட்டுப்பாதையாகவும்,தண்ணீர் செல்லும் ஓடை பாதையிலும் பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது .முள் செடிகள் முகத்தில் உரச குலுங்கியபடி செல்லும் வாகனத்தில் அமர்ந்து செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் பட்டாசு ஆலைகளில் திடீரென விபத்து ஏற்பட்டால் காயம் அடைந்த தொழிலாளர்களை அழைத்து செல்வதற்காக வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் விரைவாக செல்ல முடியாத வகையில் பட்டாசு ஆலைக்கான சாலை முழுவதும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

மீட்பு பணிக்குச் செல்லும் தீயணைப்பு வாகனங்களும் வேகமாக செல்ல முடியாமல் மெதுவாக சென்று மீட்பு பணியில் ஈடுபடும் நிலை உள்ளது.

உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை குடோன்களுக்கு கொண்டு செல்வதற்கும் மூலப் பொருட்களை கொண்டு வருவதற்கும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முறையான சாலை வசதி இன்றி அவதிப்படும் நிலை உள்ளது.

இதனால் ஊராட்சி நிர்வாகங்கள் பட்டாசு ஆலைகளுக்கு அடிப்படையை தேவையான சாலை வசதியை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள், உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us