/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்வதில் அலட்சியம்! நகர், ஊரக உள்ளாட்சிகளில் தொடரும் அக்கறையின்மை

ADDED : டிச 01, 2025 06:26 AM

மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுகள், கடைகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் தேவைக்கு ஏற்ப மேல்நிலைக்குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டது. இவற்றை அந்தந்த நிர்வாகங்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.
குடிநீர் தொட்டிகளை மாதத்திற்கு இரு முறை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதன் மூலம் மழை, குளிர் காலங்களில் குடிநீர் வழியாக பரவும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் மேல்நிலைக் குடிநீர் தொட்டிகள் பெரும்பாலும் நகர், உள்ளாட்சி நிர்வாகப் பணியாளர்களால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது. மாறாக அப்பணிகளும் முறையாக நடப்பதில்லை. இதற்கு இடைப்பட்ட காலங்களில் குடிநீரில் குளோரின் ஏற்றம் செய்து வினியோகம் செய்கின்றனர்.
மக்களும் குடிநீரை வீடுகளில் தாகம் எடுக்கும் போது நேரடியாக அருந்துவதால் நோய்த்தொற்று ஏற்படுகிறது. நோய்த்தொற்று பரவல் உள்ள இடங்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ முகாம்களை நடத்தி கண்காணிக்கின்றனர்.
அப்போது மட்டும் நகர், உள்ளாட்சி நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் தொட்டிகளை பெயரளவிற்கு சுத்தம் செய்கின்றனர். இப்பணிகளும் அதிகாரிகள் உடன் இருந்து கண்காணித்தால் மட்டுமே நடக்கிறது.
எனவே மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள மேல்நிலைக்குடிநீர் தொட்டிகளை கண்டிப்பாக மாத்திற்கு இருமுறை சுத்தம் செய்து நோய்பரவலை தடுப்பதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.