/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியப் போக்கு
/
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியப் போக்கு
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியப் போக்கு
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியப் போக்கு
ADDED : அக் 12, 2025 04:55 AM
அருப்புக்கோட்டை : மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நீர் நிலைகளின் நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் அகற்றாமல் அலட்சியம் காட்டுவதால் மழை பெய்தும் தண்ணீர் வராமல் நீர்நிலைகள் வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் ஆயிரக்கணக்கான கண்மாய்கள், ஊருணிகள் உள்ளன. இவற்றை முறையாக பராமரிக்காமல் இருப்பதால் மழைக்காலத்தில் கூட பல கண்மாய்களில் தண்ணீர் சேகரமாவது இல்லை. பல ஆண்டுகளாக கண்மாய்களின் நீர் பிடிப்பு பகுதிகள் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பிளாட் களாக மாறி விட்டது. பொதுப்பணித்துறை வருவாய்த்துறை இந்தப் பகுதிகளை ஆய்வு செய்யாமல் பட்டா போட்டு கொடுத்து விடுகின்றனர்.
அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பிளாட்களாக மாறி விட்டன. தற்போது அவை புறநகர் பகுதிகளாக மாறி விட்டன. மலையரசன் கோயில் பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதே போல், தும்பை குளம், செவல் கண்மாய் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடமைக்கு கண்மாய்களின் கரைகளை உயர்த்துவது, ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மட்டும் செய்கின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கண்மாய்களின் பரப்பளவு எத்தனை என்பது கூட அதிகாயிகளுக்கு தெரிவது இல்லை.
இதனால், மழை காலத்திலும் கூட கண்மாய்கள் நிறைவது இல்லை.
மாவட்ட நிர்வாகம் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.