/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நியோமேக்ஸ் மோசடி காரில் கடத்தி தாக்குதல்
/
நியோமேக்ஸ் மோசடி காரில் கடத்தி தாக்குதல்
ADDED : ஜன 11, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே மருளுத்து சேர்ந்தவர் ரமேஷ். இவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு நியோமேக்ஸ் நிறுவத்தில் பணிபுரிந்தார். அப்போது துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து 50, என்பவரிடம் பணம் பெற்று நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
ஆனால் நிறுவனத்தில் நடந்த பிரச்னையில் மாரிமுத்து கட்டிய பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. மருளுத்துவில் ரமேஷ் டூவீலரில் சென்ற போது மாரிமுத்து, அவரின் இரு நண்பர்களுடன் காரில் வந்து வழிமறித்து கடத்தி சென்றனர். கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதிக்கு ரமேஷை அழைத்துச்சென்று தாக்கினர். சூலக்கரை போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

