sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் தயார் சிவகாசியில் களைகட்டுகிறது விற்பனை

/

தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் தயார் சிவகாசியில் களைகட்டுகிறது விற்பனை

தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் தயார் சிவகாசியில் களைகட்டுகிறது விற்பனை

தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் தயார் சிவகாசியில் களைகட்டுகிறது விற்பனை


UPDATED : செப் 13, 2025 09:26 PM

ADDED : செப் 13, 2025 09:20 PM

Google News

UPDATED : செப் 13, 2025 09:26 PM ADDED : செப் 13, 2025 09:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. அதிகாரிகளின் ஆய்வால் பட்டாசு ஆலைகள் மூடல், அவ்வப்போது பெய்த மழை உட்பட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு, 10 சதவீதம் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Image 1468765


விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன; 4,000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.

தீபாவளிக்கு இன்னும் 37 நாட்களே உள்ள நிலையில், வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரம் ஓரளவிற்கு முடிந்த நிலையில், தொடர்ந்து வியாபாரம் நடந்து வருகிறது.

தற்போது, தமிழகம் முழுதும் இருந்து சிறு வியாபாரிகள், மக்கள் பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வர துவங்கியுள்ளனர். இதனால், பட்டாசு வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது. அதே சமயத்தில், 5 முதல், 10 சதவீதம் வரை பட்டாசு விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலர் இளங்கோவன் கூறுகையில், ''உற்பத்தி குறைந்துள்ளதால், இந்தாண்டு பட்டாசுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது வியாபாரம் களைகட்டி இருப்பதால், தீபாவளிக்கு முன்னதாக வியாபாரம் முழுமையாக முடியும்,'' என்றார்.

புது ரகங்கள் என்னென்ன?


இந்தாண்டு தீபாவளிக்கு புது வரவாக, தர்பூசணி வெடி, குங் பூ பாண்டா, ஜங்கிள் டெண்டா, பீட்சா, ஓரியோ, ஹாட் மிர்ச்சி, நருடோ அனிமேஷன், கிடார் உட்பட, பல்வேறு வகையிலான வெடிகள் மக்களை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
தர்பூசணி வெடி: பற்ற வைத்தவுடன் சிவப்பு, மஞ்சள் கலரில் தீப்பொறி பறந்து சடசடவென வெடித்து மனதை கொள்ளை கொள்ளும்.
குங் பூ பாண்டா: இந்த வெடியை வெடித்தால், சிவப்பு, மஞ்சள் கலரில் பொறி பறந்து, 20 அடி உயரம் சென்று நீர்வீழ்ச்சி போல கீழே விழும்.
ஜங்கிள் டெண்டா: சிங்கம், புலி என மிருகங்களின் முக வடிவமைப்பில் உள்ள இந்த பட்டாசை பற்ற வைத்தால், மிருகங்களின் வாயிலிருந்து தீப்பொறி சீறிப் பாயும்.
பீட்சா: பீட்சா வடிவில் ஆறு வகைகளில் உருவாக்கப்பட்ட இந்த வெடியை பற்ற வைத்தால், பல வண்ணங்களில் சிறிய சத்தத்துடன் வெடித்து சிதறும்.
ஓரியோ: இதை பற்ற வைத்தால், தீப்பொறியுடன் சுற்றி சுற்றி வரும்.

ஹாட் மிர்ச்சி: இதை பற்ற வைத்தால், வெடிக்கும். பயப்படாமல் கையில் பிடித்தும் வெடிக்கலாம்; அதற்காக வீட்டிற்குள் கொண்டு செல்லக்கூடாது.
நருடோ அனிமேஷன்: இதை பற்ற வைத்தால், 10 அடி உயரத்திற்கு பொறியாக கிளம்பி, 20 அடி உயரம் சென்று வெடிக்கும்.
கிடார்: இந்த வெடியை கையில் பிடித்து வெடிக்கலாம். பற்ற வைத்தவுடன் சில்வர் கலர் தீப்பொறி பறந்து செல்லும்.








      Dinamalar
      Follow us