நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியில் ரேஷன் கடை அருகே உள்ள இரு தெருக்களில் வாறுகால் மீது புதிதாக பாலம் அமைக்கப்பட்டது. இரு பாலங்களிலும் நடுவில் சேதம் அடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் ஆட்டோ, கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் சென்று வர முடியவில்லை. டூவீலரில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
இரவில் நடந்து செல்பவர்களும் கீழே விழுகின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அருகிலேயே ரேஷன் கடை இருப்பதால் இங்கு பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே சேதமடைந்த பாலங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

