தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காஸ் பிரச்னையால் முடங்கிய புதிய பஸ்கள்

 காஸ் பிரச்னையால் முடங்கிய புதிய பஸ்கள்

 காஸ் பிரச்னையால் முடங்கிய புதிய பஸ்கள்


ADDED : ஜூலை 01, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: அரசு போக்குவரத்து கழகத்தில் காஸ் ஸ்டேஷன்கள் இல்லாததால் காஸ் பஸ்கள் இயக்கப் படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உருவாகி உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் சுற்றுச்சூழல் மாசு குறைக்க வும், எரி பொருள் செலவை சேமிக்கவும் காஸ் பஸ்களை இயக்க நட வடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், முதன் முறையாக ராமேஸ்வரத்தில்12 புதிய காஸ் பஸ்களின் இயக்கத்தை மார்ச்சில் முந்தைய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவ சங்கர் துவக்கி வைத்தார். அப்போது மேலும் ஆயிரம் பஸ்கள் கொள் முதல் செய்ய திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 746 காஸ் பஸ்களை கொள் முதல் செய்ய நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதனிடையே ஜூனில் முதல்வர் விஜய் துவக்கி வைத்த 300 புதிய பஸ்களில் 136 பஸ்கள் காஸ் மூலம் இயங்குபவை.

அரசு போக்குவரத்து கழகத்தில் காஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப் படாமல் தனியார் ஸ்டேஷன்களை நாடும் நிலை தொடர்வதால் காஸ் தட்டுப்பாடு காரணமாக பணிமனைகளில் 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதல்வரால் துவக்கி வைத்த 136 புதிய பஸ்களும் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை உருவாகி உள்ளது. இருந்தும் இப்பிரச்னைக்கு இதுவரை த.வெ.க., அரசு நட வடிக்கை எடுக்காததால் காஸ் பஸ்கள் பாழாகும் நிலை உருவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us