/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதிய காலண்டர் ஆல்பம் வெளியீடு; 7 முதல் 10 சதவீதம் விலை உயர்வு
/
சிவகாசியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதிய காலண்டர் ஆல்பம் வெளியீடு; 7 முதல் 10 சதவீதம் விலை உயர்வு
சிவகாசியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதிய காலண்டர் ஆல்பம் வெளியீடு; 7 முதல் 10 சதவீதம் விலை உயர்வு
சிவகாசியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதிய காலண்டர் ஆல்பம் வெளியீடு; 7 முதல் 10 சதவீதம் விலை உயர்வு
ADDED : ஆக 04, 2025 12:32 AM

சிவகாசி; விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலண்டர் உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய காலண்டர் ஆல்பத்தை வெளியிட்டனர். மூலப்பொருட்கள் வெளியேற்றத்தால் கடந்தாண்டை விட 7 முதல் 10 சதவீதம் விலை அதிகரித்துள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழிலுக்கு மட்டுமல்லாமல் காலண்டருக்கும் பிரசித்தி பெற்றது. இங்கு சிறிதும் பெரிதுமாக 300க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 ம் பெருக்கை முன்னிட்டு காலண்டர் உற்பத்தியாளர்கள் புதிய ஆண்டிற்கான ஆல்பத்தை வெளியிடுவர்.
புதிய ஆல்பங்களை தங்களது ஏஜென்ட்கள், வாடிக்கையாளர்கள், மக்களுக்கு அறிமுகம் செய்வர். இதன் பின் வரும் ஆர்டர்களுக்கு புதிய ஆண்டிற்கான மாதாந்திர, தினசரி, டேபிள் காலண்டர் தயாரிக்கும் பணிகள் துவங்கும்.
2026 ம் ஆண்டிற்கான காலண்டருக்கு 2025 நவ., வரை ஆர்டர் பெறப்பட்டு டிசம்பரில் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெறும். சிவகாசியில் ரூ.16முதல் ரூ. 3500 வரை காலண்டர் பல்வேறு விதங்களில், வடிவங்களில் கிடைக்கிறது. அதன்படி நேற்று வாடிக்கையாளர்களுக்கு 2026 ம் ஆண்டிற்கான புதிய ஆல்பங்களை அறிமுகம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் காலண்டரில் பல்வேறு புதுமைகளையும் புகுத்துவர்.
நடப்பாண்டு பொற்காலம் என பெயரிட்டு புதிய காலண்டரை அறிமுகப்படுத்தியுள்ளளனர். அந்த காலண்டரில் 4 இன் 1 என்ற தினசரி, மாத நாட்காட்டிகள், நேரத்தைக் காட்டும் கடிகாரம், குறிப்பு எழுதும் டைரி என 4 வகைகளை உள்ளடக்கி அறிமுகப்படுத்தியுள்ளனர். இதே போன்று காலண்டரில் பல்வேறு புதுமைகளையும் புகுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு காலாண்டர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெயசங்கர் கூறியதாவது:
மூலப்பொருள்களில் குறிப்பாக பாலி போர்டின் விலை உயர்ந்துள்ளது. உப பொருட்களான கலிகோ, பசை, அச்சு மை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் மின் கட்டணம் விலை உயர்வு, வேலை ஆட்களின் கூலி உயர்வால் இந்தாண்டு ஏழு முதல் 10 சதவீதம் வரை காலண்டர் விலை உயர்ந்துள்ளது என்றார்.