sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப்பில் செயல்படாத புதிய சுகாதார வளாகம்

/

 சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப்பில் செயல்படாத புதிய சுகாதார வளாகம்

 சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப்பில் செயல்படாத புதிய சுகாதார வளாகம்

 சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப்பில் செயல்படாத புதிய சுகாதார வளாகம்


ADDED : பிப் 16, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

சாத்துார் வெம்பக்கோட்டை ரோடு விருதுநகர் ரோடு சந்திப்பில் மதுரை பஸ் ஸ்டாப் உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. மேலும் மதுரை, திருச்சி, கோயம்புத்துார், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், இந்த பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. மதுரை பஸ் ஸ்டாப்பில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பொது சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்து முடிந்த நிலையில் இன்றுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் வாசிகளும் வெளியூரிலிருந்து வரும் பயணிகளும் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது சுகாதார வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்து கின்றனர்.






      Dinamalar
      Follow us