/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய அருங்காட்சியகம் கலெக்டர் ஆய்வு
/
புதிய அருங்காட்சியகம் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 13, 2025 06:58 AM
விருதுநகர் : விருதுநகரில் புதிய அருங்காட்சியகத்தில் ரூ.6.8 கோடிக்கு கட்டப்பட்டு வருவதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடிக்கு கட்டப்பட்டு வருவதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் 2001ல் துவங்கப்பட்டது. வாடகை கட்டடத்தில் இயங்கி வந்ததால் தற்போது புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது.
இந்த புதிய கட்டடத்தில் தரை தளத்தில் 6 காட்சி கூடங்கள், முகவுரை காட்சி கூடம், அரசியல் தொடர்பான காட்சி கூடம், முந்தைய வரலாற்று காட்சி கூடம், நாணயவியல் காட்சி கூடம், ஆய்தவியல் காட்சி கூடம், இசை மற்றும் கலை தொடர்பான காட்சி கூடம் மற்றும் 2 கல்வெட்டு காட்சி கூடங்களும், முதல் தளத்தில் சிறப்பு கண்காட்சி பகுதி, நிர்வாக அறை, குழு அறை, கண்காணிப்பாளர் அறையும், இரண்டாம் தளத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் வைப்பு அறையும் மொத்தம் 17,409 சதுரடி பரப்பளவில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.