UPDATED : ஜூலை 02, 2026 04:37 PM
ADDED : ஜூலை 02, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சௌடாம்பிகா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில், புதிய மாணவர்கள் வருகை ,வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லூரியின் நிர்வாக குழு தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். செயலர் ராஜேந்திரன், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். மதுரை ஹோட்டல் ரெசிடென்சி சிக்னேச்சர் பயிற்சி மேலாளர் சதீஷ்குமார் பேசினார். மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.
----
