தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் போட்டி:மாநில போட்டிக்கு சிவகாசி மாணவர்கள் தேர்வு

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் போட்டி:மாநில போட்டிக்கு சிவகாசி மாணவர்கள் தேர்வு

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் போட்டி:மாநில போட்டிக்கு சிவகாசி மாணவர்கள் தேர்வு


ADDED : அக் 19, 2014 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2014 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி:விருதுநகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் மாநில போட்டிக்கு சிவகாசி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் விருதுநகரில் நடைபெற்றது. சிவகாசி சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ., மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்கள், பெண்களுக்கான எறிபந்து போட்டியில் இப் பள்ளி மாணவ, மாணவியர்கள் முதலிடம் பெற்றனர்.

தடகள போட்டி இப் பள்ளி மாணவர்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் பிச்சைமணி, 50 மீட்டர் ஓட்டத்தில் அமலா, குண்டு எறிதலில் கருப்பசாமி, கிரிக்கெட் பந்து எறிதலில் சிந்தியா, மாரிச்சாமி முதலிடம் பெற்றனர்.

போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்ற வீரர்களை தலைமை ஆசிரியர் தயாளன் பர்னபாஸ், நிர்வாகி ஜெபசிந்தை பாராட்டினர்.

* மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் சி.எஸ்.ஐ., செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஜூனியர் ஒற்றையர் பிரிவில் மதன்குமார் முதலிடம், ஜூனியர் இரட்டையர் பிரிவில் கார்த்தீஸ்வரன்,மகேஸ்குமார் முதலிடம் பெற்றனர். இதே பிரிவில் முத்துமாரி, மாரிச்செல்வி முதலிடம் பெற்றனர். சீனியர் இரட்டையர் பிரிவில் முத்தீஸ்வரி, தனலட்சுமி இரண்டாம் இடம் பெற்றனர்.

காளிராஜன், பாண்டியன் மூன்றாம் இடம் பெற்றனர். சீனியர் ஒற்றையர் பிரிவில் பாபு மூன்றாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், அலீஸ் ரஞ்சிதம் பள்ளி தாளாளர் டேனியல், தலைமை ஆசிரியர் பால்ராஜ் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us