ADDED : நவ 13, 2016 11:33 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆய்விற்கு வந்த பயணிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி, பயணிகளிடம் குறைகளை கேட்டார்.
அப்போது ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தினர் மனு அளித்தனர். அதில், பகல் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டித்தல், மானாமதுரையோடு நிறுத்தப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தென்காசி வரை நீட்டித்தல், இரண்டாவது பிளாட்பாரத்திற்கு மேற்கூரை அமைத்தல், திருச்செந்துாரிலிருந்து கொல்லம் செல்லும் பாசஞ்சர் ரயில் கோவில்பட்டி, சாத்துார் வழியாக பழனிக்கு செல்வதற்கு பதிலாக தென்காசி வழியாக திருப்பினால் ஸ்ரீவி., தென்காசி கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் பயன் பெறுவர், போன்ற கோரிக்கைகள் இருந்தன. ஆசீர்வாதம் ஆச்சாரி, “சென்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை செய்வதாக” கூறினார். ரயில்வே நிலைய ஸ்டேஷன் மாஸ்டர்கள் செங்கோல்ராஜ், வேலடி முத்தையா, தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவர் பத்மநாபன், செயலர்கள் வெங்கடேஸ்வர ராஜா, நாராயணசாமி இணைச்செயலர் மணிவண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இருந்தனர்.
