/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பல் டாக்டர் இல்லை காம்பவுண்ட் சுவர் இல்லை
/
பல் டாக்டர் இல்லை காம்பவுண்ட் சுவர் இல்லை
ADDED : ஆக 02, 2025 02:21 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர பல் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டும், மருத்துவமனை வளாகத்தின் சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. பந்தல்குடியை சுற்றியுள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற வருவார். இங்கு அனைத்துவித வசதிகள் இருப்பதால் மக்கள் சிகிச்சை பெற வசதியாக உள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. வெளி ஆட்கள் டூவீலர்களில் மருத்துவமனை வழியாகத்தான் செல்கின்றனர். இதனால் மருத்துவமனையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதேபோல் இங்கு நிரந்தர பல் டாக்டர் இல்லை. வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வந்து செல்கிறார். இதனால் பல் சிகிச்சைக்கு வருபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் தனியார் மருத்துவமனைக்கும் வெளியூருக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
நிரந்தர பல் டாக்டர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல் சிகிச்சை பெற தனியாக கட்டடம் இருந்தும் பயனில்லாமல் பூட்டியே உள்ளது. இதேபோன்று வளாகத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.