தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாறுகால் வசதி, குப்பைத்தொட்டி, கழிப்பறை இல்லை

 வாறுகால் வசதி, குப்பைத்தொட்டி, கழிப்பறை இல்லை

 வாறுகால் வசதி, குப்பைத்தொட்டி, கழிப்பறை இல்லை


ADDED : மார் 01, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 07:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் அருகே பாப்பாக்குடியில் முறையான வாறுகால், குப்பைத் தொட்டி, கழிப்பறை வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பாப்பாக்குடியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் வாறுகால்கள் துார்ந்து போன நிலையில் உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் வாறுகாலில் செல்லாமல் காலியாக உள்ள இடங்களில் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.

குளியலறை கட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ளது. பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இங்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் வகையில் பொது சுகாதார வளாகங்கள் இல்லை. இதனால் இருபாலரும் சாலை ஓரங்களை திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

குப்பைத் தொட்டிகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. துாய்மை பணியாளர்கள் மாதம் ஒரு முறை வாறுகால்களை சுத்தம் செய்கின்றனர். இதனால் வாறு கால்களில் குப்பை குவிந்து காணப்படுகின்றன. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக இந்த பகுதியில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்த போதும் உள்ளூர் குடிநீர் ஆதாரம் மூலமாகவே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த தண்ணீரும் உப்பு சுவையுடன் உள்ளதால் மக்கள் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுவதால் இரவு நேரத்தில் மக்கள் கையில் டார்ச் லைட்டுடன் நடமாடும் நிலை உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us