/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் வினியோகம் இல்லை: மக்கள் அவதி
/
குடிநீர் வினியோகம் இல்லை: மக்கள் அவதி
ADDED : ஜூலை 26, 2025 11:21 PM

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரம் காலனியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரம் காலனியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு அதன் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தவிர ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 800 வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சிவகாமிபுரம் காலனி பகுதி முழுவதும் பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களான இப்பகுதி மக்கள் தனியார் வாகனத்தில் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தினமும் குடிநீரை விலைக்கு வாங்க சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.