/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பைத்தொட்டி, ரோடு, கழிவுநீர் செல்ல வழியில்லை-- அவதியில் இந்திரா நகர் மக்கள்
/
குப்பைத்தொட்டி, ரோடு, கழிவுநீர் செல்ல வழியில்லை-- அவதியில் இந்திரா நகர் மக்கள்
குப்பைத்தொட்டி, ரோடு, கழிவுநீர் செல்ல வழியில்லை-- அவதியில் இந்திரா நகர் மக்கள்
குப்பைத்தொட்டி, ரோடு, கழிவுநீர் செல்ல வழியில்லை-- அவதியில் இந்திரா நகர் மக்கள்
ADDED : அக் 22, 2025 12:59 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் குப்பைத்தொட்டி, வாறு கால் வசதி இல்லை, குடியிருப்பு அருகே கழிவு நீர் தேக்கத்தால் குடியிருப்போர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்திர நகர் குடியிருப்போர் வனராஜ், சேகர், செந்தில், சமுத்திரம், திருச்சுலியான், ஆத்தங்கரை ஆகியோர் கூறியதாவது: மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதி ராஜபாளையத்தில் புறநகர் பகுதியாக தென்றல் நகர் மெயின் ரோட்டில் இருந்தும் இந்திரா நகரை ஒப்பிடும்போது இதன் அடுத்தடுத்த பகுதிகள் வளர்ச்சி அதிகம்.
இங்குள்ள பிரதான ஓடையை குப்பை கொட்டி கிடங்காக மாற்றியுள்ளனர். முறையாக குப்பை போடுவதற்கு தொட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் அவ்வழியாக செல்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
மகளிர்க்கான சுகாதார வளாக வசதி தொடர் கோரிக்கைகளாகவே இருந்து வருகிறது. திறந்த வெளியால் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பணிகள் முடிந்தும் குடிநீர் சப்ளை இதுவரை இல்லை. ஆதியூர் கண்மாயில் இருந்து சப்ளை ஆகும் தண்ணீர் மழை நேரங்களில் உபயோகிக்க முடியவில்லை.
லேசான மழை பெய்தாலும் அருகாமை பகுதியில் வெளியேறும் கழிவு நீரும் மழை நீரோடு தேங்கி விடுகிறது. தேங்கும் நீரை வெளியேற்ற எந்தவித திட்டமிடலும் இல்லாததால் மழைக்காலத்தில் சொல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருகில் உள்ள சாஸ்திரி நகர், கிருஷ்ணன் கோவில் தெரு பகுதிகளில் வெளியேறும் கழிவு நீர் இப்பகுதிக்கு திருப்புவதால் குடியிருப்பு வாசிகளுக்குள் தகராறு ஏற்படுகிறது.
குப்பை முறையாக அகற்றாமல் மர்ம நபர்கள் தீ வைத்து விடுவதால் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களுக்கு சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்புகள் உண்டாகிறது. மொத்தம் உள்ள 9 தெருக்களில் 5 மட்டும் பேவர் பிளாக் பதித்துள்ளனர். மற்ற தெருக்கள் மண் ரோடாக காட்சியளிக்கிறது.
மெயின் ரோட்டில் இருந்து குடியிருப்பு வரை உள்ள பகுதி மின் கம்பங்களில் முறையாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை. கண்மாய்கள், காலி மனைகளில் உள்ள புதர்களில் வெளியேறும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சுப காரியங்களுக்கு சமுதாயக்கூடம் இல்லை. குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் மைதானம், படிப்பகம் அமைக்கவில்லை. அடிப்படை வசதிகள் கேட்டு தொடர் கோரிக்கை வைத்து வருகிறோம். வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும், என்றனர்.