/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேண்டாம் மயிலாடுதுறை; மதுரை வரையே போதும் விரக்தியின் உச்சத்தில் தென் மாவட்ட ரயில் பயணிகள்
/
வேண்டாம் மயிலாடுதுறை; மதுரை வரையே போதும் விரக்தியின் உச்சத்தில் தென் மாவட்ட ரயில் பயணிகள்
வேண்டாம் மயிலாடுதுறை; மதுரை வரையே போதும் விரக்தியின் உச்சத்தில் தென் மாவட்ட ரயில் பயணிகள்
வேண்டாம் மயிலாடுதுறை; மதுரை வரையே போதும் விரக்தியின் உச்சத்தில் தென் மாவட்ட ரயில் பயணிகள்
ADDED : ஜூன் 13, 2025 01:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரை வரை சிறப்பாக இயங்கி வந்த ரயில், மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு இட நெருக்கடியால் பயணிகள் தவிக்கின்றனர். எனவே மயிலாடுதுறை வரை வேண்டாம், மதுரை வரையே போதும் என பயணிகள் கூறுகின்றனர்.
செங்கோட்டை- - விருதுநகர் அகல ரயில் பாதையாக்கப்பட்ட பின் 2004 முதல் இந்த வழித்தடத்தில் தினமும் 3 தடவை பயணிகள் ரயில் மதுரைக்கு இயக்கப்பட்டது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் பயனடைந்து வந்தனர்.
2022 முதல் மயிலாடுதுறை - -திண்டுக்கல் ரயிலையும், செங்கோட்டை- - மதுரை ரயிலையும் இணைத்து செங்கோட்டை- - மயிலாடுதுறை ரயிலாக இயக்கினர். தென் மாவட்ட மக்கள் திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஒரே ரயிலில் செல்வதற்கு வசதியாக இருந்தது.
ஆனால் நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படாமல் 10 பெட்டிகளாக குறைத்து இயக்கினர். கடும் இட நெருக்கடியில் மக்கள் உயிரை பணயம் வைத்து படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கின்றனர்.
சில மாதங்களாக இந்த ரயில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக அடிக்கடி வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது. தென் மாவட்ட பணிகள் மதுரை வந்து, செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால் முன்பு போல் தங்களுக்கு மதுரை வரையே பயணிகள் ரயில் போதும், மயிலாடுதுறைக்கு வேண்டாம்.
தற்போது செங்கோட்டையில் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மதுரை வரும் ரயிலை மீண்டும் 5:15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை சென்று திரும்பும் வகையில் இயக்க வேண்டும்.
மயிலாடுதுறையில் மதியம் 12:10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயிலை, மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு 7:30 மணிக்கு மதுரை வந்து பின் செங்கோட்டை வரை செல்லும் கூடுதல் ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.