/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
10 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை
/
10 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை
ADDED : டிச 04, 2025 04:16 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 10 நாட்களாக பல்வேறு வார்டுகளில் குடிநீர் சப்ளை செய்யப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக செண்பகத்தோப்பு பேயனாறு மூலமும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பல்வேறு வார்டுகளில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகராட்சி கமிஷனர் குமார் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பம்பிங் ஸ்டேஷன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சரி செய்யப்பட்டு தற்போது குடிநீர் வர துவங்கியுள்ளது. இன்று மாலை முதல் தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்யப்படும். தற்காலிக தீர்வாக பேயனாற்றிலிருந்து கிடைக்கும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

