/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 'மின் விசைப்பம்பு'
/
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 'மின் விசைப்பம்பு'
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 'மின் விசைப்பம்பு'
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 'மின் விசைப்பம்பு'
ADDED : செப் 10, 2025 02:05 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் விசைப்பம்பு குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுகாதாரமான குடிநீரை குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்களின் பங்களிப்பு நிதி உதவியோடு ரூ. 5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து எந்த இடத்திலும் செயல்படவில்லை. இதனால் மக்கள் குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
சிவகாசியில் கட்டளைபட்டி ரோடு, பிச்சாண்டி தெரு, அண்ணா காலனி, அம்மன் கோவில்பட்டி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்றளவும் செயல்படவில்லை. அதே சமயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்திற்கு என மின் விசைப்பம்புடன் கூடிய தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த தொட்டிகளும் சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் பெரும்பான்மையானவை காட்சி பொருளாகி விட்டது. இதனால் அனைத்து தேவைகளுக்குமே மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிவகாசி பகுதியில் பைபாஸ் ரோடு, அம்மன் கோவில்பட்டி தெரு, விஸ்வநத்தம் ரோடு, பழைய விருதுநகர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்விசைப்பம்பு குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டில் இல்லை. மின் விசை பம்பு தொட்டிகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை உள்ளாட்சி நிர்வாகம் கண்காணித்து அதனை செயல்படுத்த வேண்டும்.
ஆனால் அந்த நடைமுறை காற்றில் பறந்து விட்டது. இதனால் சில இடங்களில் தொட்டிகளும் காணாமல் போய்விட்டது. எனவே செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு மின் விசை பம்புகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.